Posts

Showing posts from January, 2019

இலக்கண குறிப்பறிதல் பகுதியிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படலாம். ஐந்திற்கும் எளிதாக விடையளிக்கலாம் பெயரெச்சம் வினையெச்சம் முற்றெச்சம் வினைத்தொகை பண்புத்தொகை வினைமுற்று வினையாலணையும் பெயர் உருவகம் உவமைத்தொகை ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் எண்ணும்மை உம்மைத்தொகை உரிச்சொற்றொடர் அன்மொழித்தொகை 1.பெயரெச்சம்: ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும். (எ.கா)  படித்த மாணவன் வந்த வாகனம் தந்த பணம் கண்ட கனவு சென்ற நாட்கள் மேற்கணடவற்றுள்  படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும். பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது? படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவற்றை கணக்கிட்டுதான் பெயரெச்சம் என எண்ண வேண்டும். முதலில் படித்த,வந்த,சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள  'அ' என்னும் சத்தத்தோடு முடியும். விளக்க

தாயுமானவர் பொதுத்தமிழ் Tnpsc

தாயுமானவர் வாழ்க்கைக்குறிப்பு: பெயர் = தாயுமானவர் பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது. பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார் மனைவி = மத்துவார்குழலி மகன் = கனகசபாபதி ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்) பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர் காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு சிறப்பு பெயர்: தமிழ் சமய கவிதையின் தூண் படைப்பு: தாயுமானவர் திருப்பாடல் திரட்டு குறிப்பு: இவரின் பாடலை “தமிழ்மொழியின் உபநிடதம்” எனப் போற்றுவர் இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் கல்வி கற்றார் இவரின் “பராபரக்கண்ணி” 389 கண்ணிகளை உடையது இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் சமரச சன்மார்கத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர் உபநிடதக் கருத்துக்களை தமிழில் மிகுதியாக சொன்னவர் தாயுமானவர் தனிப்பாடல் திரட்டில் 56 உட்பிரிவுகளும் 1452 பாடல்களும் உள்ளன பராபரக் கண்ணி, எந்நாட் கண்ணி, கிளிக் கண்ணி, ஆனந்த களிப்பு, ஆகார புவனம

இலக்கணகுறிப்பு பொதுதமிழ் Tnpsc group -2,2a,4

இலக்கணக்குறிப்பு ஒழுக்கம் – தொழிற்பெயர் காக்க – வியங்கோள் வினைமுற்று பரிந்து, தெரிந்து – வினையெச்சம் இழிந்த பிறப்பு – பெயரெச்சம் கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர் உடையான் – வினையாலணையும் பெயர் உரவோர் – வினையாலணையும் பெயர் எய்தாப் பழி – ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம் நல்லொழுக்கம் – பண்புத்தொகை சொலல் – தொழிற்பெயர் அருவினை – பண்புத்தொகை அறிந்து – வினையெச்சம் பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மைகள் மாமலை – உரிச்சொற்றொடர் அருவிலை, நன்கலம் – பண்புத்தொகைகள் சென்ற வட்டி – பெயரெச்சம் செய்வினை – வினைத்தொகை புன்கண், மெய்கண் – பண்புத்தொகைள் ஊர(ஊரனே) – விளித்தொடர். போர்க்குகன் -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை கல்திரள்தோள் – உவமைத்தொகை நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை திரைக்கங்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை இருந்தவள்ளல் – பெயரெச்சம் வந்துஎய்தினான் – வினையெச்சம் கூவா – கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

அணி அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள், இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும். செய்யுளில் அமையும் அணி கற்பவருக்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும். 1 . தற்குறிப்பேற்ற அணி : இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி. தற்குறிப்பேற்ற அணி – (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி) தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய், – வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம். விடியற்காலையில் கோழிகள் கூவுதல் இயல்பான நிகழ்ச்சி. ஆனால் கவிஞர், காட்டில் நள்ளிரவில் கணவனைப் பிரிந்து வருத்தமுற்ற தமயந்த்தியின்; துயரைப் போக்க, இருளை நீக்குவதற்குத் தேரேறி விரைந்து வருமாறு ஞாயிற்றைக் கோழிக் கூட்டங்கள் கூவி அழைப்பதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார். எனவே, இது தற்குறிப்பேற்ற அணி. 2 . வஞ்சப்புகழ்ச்சி அணி : புகழ்வதுப்போலப் பழிப்பதும், பழிப்பதுபோலப் புகழ்வதும்

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். 1. பொருட்பெயர் பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி. 2. இடப்பெயர் இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை. 3. சினைப்பெயர் சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர். மரம் -பொருட்பெயர். இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும். உடல் -பொருட்பெயர் கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள். 4.  காலப்பெயர் காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும். திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள். 5. பண்புப் பெயர் ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டு - பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்