Hindu religious exam EO tnpsc

1. கீழ்வரும் வாக்கியங்களை ஆராயவும்:
1) விஷ்ணு, நாராயணா மற்றும் வாசுதேவனை ஒரே கடவுளாக தைத்ரேய உபநிடத்தில் பாவிக்கப்படுகிறார்கள்
2) தர்மம் சரிந்து அதர்மம் உயர்ந்தால் மறு அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று கிருஷ்ணர் கூறுகிறார்
இதில் எது சரி?
அ) 1-மட்டும் சரி ஆ) 2- மட்டும் சரி 
இ) 1 மற்றும் 2-ம் சரி ஈ) 1 மற்றும் 2-ம் சரியில்லை

2. சைவ ஆகமம் தொடர்புடையது
அ) தந்திரங்கள் ஆ)பிரார்த்தனை இ) தியானம் ஈ) எல்லாம் 

3. பஞ்சர்வ ஆகமத்தின்படி கடவுள் ஐந்து நிலையில் இருக்கிறார். அவற்றுள் இங்கு சரியாக பொருத்தப்படாத நிலை:
அ) பரா : வைகுண்டத்தில் இருக்கும் கடவுள்
ஆ) வாசுதேவ வியுஹா : ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள லட்சுமி நாராயணா
இ) விப்பால் : பூமியில் கடவுளின் அவதாரங்கள்
ஈ) அனிருத்த வியுஹா : அழித்தலை பார்த்துக்கொள்ளும் கியானா மற்றும் பாலா 

4. திருவாசகத்தின் வேறு பெயர்
அ) தமிழ் வேதம் ஆ) சைவ வேதம் 
இ) அ மற்றும் ஆ ஈ) எதுவுமில்லை 

5. 'ஸ்தோத்திர ரத்னா'வை எழுதியவர் 
அ) யமுனா ஆ) ராம மிஷரா இ) ஈஸ்வர முனி ஈ) ராமானுஜர்

6. ஆழ்வார்களுடைய 4000 பாடல்களுக்கான விளக்கவுரை முதன் முதலில் எழுதியவர்
அ) பெரியவாச்சான்பிள்ளை ஆ) வேதாந்த தேசிகர்
இ) நாஞ்சியார் ஈ) குருசேகர்

7. பிற்காலத்தில் வைணவ கருத்துகளை மற்ற தத்துவங்களில் இருந்து காக்க தொகுத்து வகைப்படுத்தி வழங்கியவர்கள்
1) தேசிகாச்சாரி 2) நாதமுனி
3) யமுனாச்சாரி 4) ராமானுஜர்
இதில் சரியான ஒன்றை தேர்ந்தெடு
அ) இவை அனைத்தும் ஆ) 1. 2 மற்றும் 3
இ) 3 மட்டும் ஈ) 4 மட்டும்

8. i. சைவக் கூற்றுப்படி மாயை பொருள் காரணமாக அமைகிறது
ii. எனவே கடவுள் (பதி) உலகத்தைப் படைக்கும் ஆற்றல் உடையவர் 
மேற்கண்ட தொடர்களிலிருந்து கீழ்காணும் சரியான விடையைத் 
தேர்ந்தெடு 
அ) i மற்றும் ii சரி ஆ) i சரி ஆனால் ii தவறு
இ) i தவறு ஆனால் ii சரி ஈ) இரண்டும் தவறு 

9. ஆணவ மலம் அநாதிதொட்டே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது என்று சைவம் கூறுகிறது. அதனால் எதை இவ்வாறு குறிப்பிடலாம் ?
1) சகச மலம் 2) மூல மலம் 3) கன்ம மலம் 4) மாய மலம் 
இதன் அடிப்படையில் கீழ்கண்டவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடு
அ) 1-ம் மற்றும் 2-ம் சரி ஆ) 1-ம் மற்றும் 4-ம் சரி
இ) 1-ம் மற்றும் 3-ம் சரி ஈ) அனைத்தும் சரி

10. கீதை போதிப்பது
1) தனி மனித அற இயல் 2) சமுதாய அற இயல்
3) செயல்களை துறத்தல் 4) வாழ்க்கையை துறத்தல்
கீழ்க்கண்டவற்றில் சரியானதைத் தேர்ந்தெடு
அ)1-மட்டும் சரி ஆ)2-மட்டும் சரி இ) 3-ம் 4-ம் சரி ஈ) அனைத்தும் சரி 

11. பொருத்துக : 
அ) சைவ சித்தாந்தம் 1) பக்தி
ஆ) வைணவம் 2) ஞானம்
இ) மீமாம்சம் 3) கடமை
ஈ) கீதை 4) யாகங்கள்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 2 1 4 3
ஆ) 2 3 4 1
இ) 1 3 4 2
ஈ) 4 3 2 1

12. வேதங்களின் பல்வேறு பகுதிகளின் வரிசை முறையே -----------
அ) பிராமணங்கள், ஆரண்யங்கள், மந்திரங்கள், உபநிடதங்கள்
ஆ) மந்திரங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள்
இ) உபநிடதங்கள், மந்திரங்கள், ஆரண்யங்கள், பிராமணங்கள்
ஈ) பிராமணங்கள், மந்திரங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள்

13. மத்வர் ஆதரிப்பது:
அ) சத்காரிய வாதம் ஆ) அசத் காரிய வாதம்
இ) சதசத்காரிய வாதம் ஈ) விவாத வாதம்

14. சைவ சித்தாந்த கொள்கைப்படி உயிர் அநாதிதொட்டே கட்டுண்டு அல்லற்படுவதற்கு காரணம்
அ) மாய மலம் ஆ) கர்ம மலம் இ)ஆணவ மலம் ஈ) அனைத்தும் 

1.இ 2.அ 3. ஈ 4.இ 5.அ 6.அ 7.ஈ 8.அ 9.இ 10.அ 11.அ 12.ஆ 13. இ 14.இ

Comments

Popular posts from this blog

எதுகை,மோனை,இயைபு

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc