TNPSC பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 2 (20 வினாக்கள்)

  1. புதுப்பிக்க இயலாத வளங்களில் சரியானவை தேர்ந்தெடு
    (i) பெட்ரோலியம் (ii) சூரிய ஒளி (iii) நிலக்கரி (iv) காற்றாலை
    1. 1,2 சரி 3,4 தவறு
    2. 1,3,4 சரி 2 தவறு
    3. அனைத்தும் சரி
    4. 1,3 சரி 2,4 தவறு

  2. மேற்கத்திய இடையூறுகளால் மழைபெறும் இடம்
    1. சென்னை
    2. பஞ்சாப்
    3. மும்பை
    4. அலகாபாத்

  3. “சாங்போ” என்று அழைக்கப்படும் ஆறு ?
    1. பிரம்மபுத்திரா
    2. யமுனை
    3. சிந்து
    4. கங்கை

  4. பீகாரின் துயரம் என அழைக்கப்படும் ஆறு
    1. தபதி
    2. கோசி
    3. நர்மதை
    4. கோதாவரி

  5. தோ ஆப் என்பதன் பொருள் (ஆற்றிடை சமவெளி)
    1. கழிமுகம், சதுப்பு நிலை காடுகளை குறிப்பது
    2. கங்கை சமவெளியில் அமைந்துள்ள பகுதி
    3. இரு கடலுக்கு இடைப்பட்ட பகுதி
    4. இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட செழிப்பான வண்டல்மண் நிறைந்த சமவெளி

  6. கங்கை ஆற்றின் துணையாறுகளில் தவறானவை
    1. பீட்வா
    2. திகாங்
    3. கோமதி
    4. காக்ரா

  7. பொருத்துக
    (1) இமாச்சல பிரதேசம் (a) ஷிப்கிலா
    (2) சிக்கிம் (b) நாதுலா
    (3) காஷ்மீர் (c) சொஜிலா
    (4) கேரளா (d) பாலக்காடு
    1. b c d a
    2. d c a b
    3. a b c d
    4. a b d c

  8. இரண்டு நிலப்பகுதியை பிரிக்கும் நீர் பகுதிக்கு
    1. டெத்தீஸ்
    2. அங்காரா
    3. கோண்டுவனா
    4. பாந்தலாசா

  9. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. அஸ்ஸாம் - திஸ்பூர்
    2. ராஜஸ்தான் - ஜெய்ப்பூர்
    3. மிசோரம் - சில்வாசா
    4. உத்தர காண்ட் - டேராடூன்

  10. இந்தியாவில் (2011) அதிக மக்களடர்த்தி கொண்ட மாநிலம்
    1. பீகார்
    2. மகாராஷ்ரா
    3. மேற்கு வங்காளம்
    4. உ.பி

  11. தேயிலை மற்றும் காப்பி பயிர்கள் அதிகமாக விளையும் இடம்
    1. ஆற்று பள்ளத்தாக்குகள்
    2. மலைச்சரிவுகள்
    3. சமவெளிகள்
    4. கடற்கரை சமவெளிகள்

  12. பருத்தி ஒரு
    1. உணவு பயிர்
    2. திணைப்பயிர்
    3. தோட்டப்பயிர்
    4. பணப்பயிர்

  13. வேளாண்மையை பருவகாற்று சூதாட்டம் என அழைக்கப்படும் நாடு
    1. சீனா
    2. அமெரிக்கா
    3. வடகொரியா
    4. இந்தியா

  14. பொருத்துக
    (1) காபி (a) மத்திய பிரதேசம்
    (2) தேயிலை (b) ஆந்திரா
    (3) புகையிலை (c) அஸ்ஸாம்
    (4) பருப்புவகைகள் (d) கர்நாடகம்
    1. d b c a
    2. c b a d
    3. d c b a
    4. a b c d

  15. தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம்
    1. திருவாரூர்
    2. தஞ்சை
    3. நாகபட்டினம்
    4. நாமக்கல்

  16. கீழ்கண்டவற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு
    1. பணப்பயிர் - அக்டோபர் (மிதமான குளிர்)
    2. சையத் பயிர் - மார்ச் (கோடை)
    3. ராபி - நவம்பர் (குளிர்காலம்)
    4. காரிஃப் - ஜீன் (பருவ மழை)

  17. இந்தியா அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த ஆண்டு
    1. 1974
    2. 1975
    3. 1976
    4. 1977

  18. பொருத்துக
    (1) ஓத சக்கி (a) தமிழ்நாடு
    (2) அலைசக்தி (b) குஜராத்
    (3) சூரிய சக்தி (c) சுந்தரவனம்
    (4) காற்று சக்தி (d) விழிஞ்ஞம்
    1. b a d c
    2. d b c a
    3. c d b a
    4. d c b a

  19. இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு.
    1. 1898
    2. 1897
    3. 1891
    4. 1895

  20. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. அனல் மின் சக்தி - சட்டிஸ்கர்
    2. இயற்கை எரிவாயு - அந்தமான் தீவு
    3. பெட்ரோலியம் - மும்பை ஹை
    4. நீர்மின் சக்தி - டார்ஜிலிங்


Comment your score below.
Let's see who gets full marks!!!




Comments

Popular posts from this blog

புணர்ச்சி

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

எதுகை,மோனை,இயைபு